சச்சினுடன் ரோகித்தை ஒப்பிட்ட ஐசிசி - வைரலாகும் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் ஷர்மா அடித்த ஷாட் ஒன்றை, 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது சச்சின் அடித்த ஷாட்டுடன் ஒப்பிட்டு ஐசிசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

2003-ம் ஆண்டு மார்ச் 1 ஆம்ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் சச்சின் டெண்டுல்கரின் 98 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர் முடிவில் 273 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அன்வர் 101 ரன்கள் எடுத்தார். 


Advertisement

இதையடுத்து 274 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை தந்த சச்சின் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் சதம் அடிக்காமல் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 45.4 ஓவரில் 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

 

இந்த தொடரில் சச்சின் அடித்த ஷாட்டுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் அடித்த ஷாட் ஒன்றை ஒப்பிட்டு ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் யார் சிறப்பாக ஷாட் அடித்துள்ளனர் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் ரசிகர்கள் பெரும்பாலானோர் சச்சினையே முன் மொழிந்துள்ளனர். 

loading...

Advertisement

Advertisement

Advertisement