மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் போராட்டத்தைக் கைவிடத் தயார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் நில்ரதன் சர்கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை நோயாளியின் உறவினர் ஒருவர், பயிற்சி மருத்துவர் ஒருவரை தாக்கியதாகத் தெரிகிறது. இதில் அவர் தலையில் அடிப்பட்டு உயிரிழந்தார். இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மருத்துவரின் இறப்புக்கு கண்டனம் தெரிவித்தும் ஐந்தாவது நாட்களாக பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். இருப்பினும், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்ற 17 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறம் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர்களின் போராட்டத்துக்கு பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தூண்டுதலே காரணம் என மம்தா பேசியதாகவும் அதற்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மேலும், மருத்துவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிற்சி மருத்துவர்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்குகளை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளையும் மம்தா பானர்ஜி நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடத் தயார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!