[X] Close >

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார்

DMK-Former-Rajya-sabha-mp-Sivasubramanian-passed-away

திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்.


Advertisement

திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமானவராக அறியப்படும் சிவசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவர் கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர். அத்துடன் 1989-ஆம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் தேர்வானார்.


Advertisement

இதுதவிர கட்சியிலும் சில பொறுப்புகளை வகித்து வந்தார். இந்நிலையில் சிவசுப்பிரமணியத்தின் மறைவு அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவிற்கு திமுக தொண்டர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close