ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாத் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 


Advertisement

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாத் மாவட்டத்தில் உள்ள கே.பி.சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பயங்கரவாதிகள் திடீரென வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். சிஆர்பிஎஃப் வீரர்கள் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 

பயங்கராவதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், பயங்கரவாதிகள் தரப்பிலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

முன்னதாக, புல்வாமா பயங்கரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனங்கள் மீது நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமாக வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

loading...

Advertisement

Advertisement

Advertisement