ஆளுநருடன் முதலமைச்சர் பழனிசாமி திடீர் சந்திப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென சந்தித்துள்ளார். இந்தத் திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 


Advertisement

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று சந்தித்தார். இந்த நிலையில் இந்தத் திடீர் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பின்போது தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி நியமனம், 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 


Advertisement

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏழுபேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஆளுநர் மாளிகையில் கேட்டுச் சொல்கிறோம் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் இதுகுறித்து பேச அதிக வாய்ப்பு உள்ளது. 

மேலும் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியின் பதவிகாலம் நிறைவடைய உள்ளது. ஏற்கனவே டிஜிபி டிகே ராஜேந்திரன் இரண்டு முறை பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளார். அதனால் மீண்டும் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது. ஆனால் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதுகுறித்த முடிவு எடுக்கவும் இந்தச் சந்திப்பு நடைபெறலாம் எனத் தெரிகிறது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement