இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் புதிய கல்விக் கொள்கை தெரிவித்துள்ளது.
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நிலையங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டுமென புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களாக சொல்லப்பட்ட தரவுகளில்தான் இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி தகவலின்படி, அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், தென்கொரியா போன்ற நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணிசமான சதவிகிதத்தை ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக செலவிடப்படும் சூழ்நிலையில் இந்தியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இதற்கான தொகை ஒதுக்கப்படுகிறது, எனவே இதற்கான நிதி உதவியினை அதிகரிக்க புதிய கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களில் வெறும் 15 நபர்கள் மட்டுமே ஆராய்ச்சியாளர்களாக இருப்பதாகவும், இந்த எண்ணிக்கையை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்தியா மிகக் குறைவான எண்ணிக்கையில் ஆராய்ச்சியாளர்களை கொண்ட நாடாக இருக்கின்றது எனவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டில் ஒரு லட்சத்தில் 825 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். அதுவே அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 423 பேர் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். இந்தியாவுக்கு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கடுமையான போட்டி நாடாக பார்க்கப்படும் சீனாவில் ஒரு லட்சம் நபர்களின் 111 பேரை ஆராய்ச்சியாளர்களாக கொண்டுள்ளது.
அதுமட்டும் இன்றி சீனாவில் இருந்து மொத்தமாக 13 லட்சத்து 38 ஆயிரத்து 503 காப்புரிமை விண்ணப்பங்கள் இதுவரை கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து 6 லட்சத்து 5671 காப்புரிமை விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இருந்து வெறும் 47 ஆயிரத்து 57 காப்புரிமை விண்ணப்பங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாக வேர்ல்ட் இண்டலெக்ச்சுவல் பிராபர்டி ஆர்கனைசேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக புதிய கல்விக் கொள்கை வரைவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிலும் 70 சதவீதமான காப்புரிமை விண்ணப்பங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்தப் புள்ளி விவரம் நிச்சயம் அதிர்ச்சியளிப்பதாகதான் உள்ளது. ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் நாடுகள் மட்டுமே வேகமான வளர்ச்சியை அடையமுடியும் எனக் கூறியுள்ள இந்த வரைவு, இத்தகைய நிலைக்கு காரணம் சரியான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததுதான் என்பதாகவும் எனவே கூடுதல் ஆராய்ச்சி மையங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் எனப் புதிய கல்விக் கொள்கை வரைவு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகவல்கள் - நிரஞ்சன் குமார், செய்தியாளர்- டெல்லி.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி