சினிமாவில் ஸ்ரீதேவியாக நடிக்க தமன்னா ஆசை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதையில் நடிக்க தயாராக இருப்பதாக, நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். 


Advertisement

பிரபல நடிகை ஸ்ரீதேவி, இந்திப் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர்.கடந்த வருடம் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க துபாய் சென்ற ஸ்ரீதேவி, அங்கு குளியல் தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். 


Advertisement

ஸ்ரீதேவியின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கப்போவதாக அவரது கணவர் போனிகபூர் அறிவித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தை எடுக்க உள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதேவியாக நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக நடிகை தமன்னா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்போது மீண்டும் அதை வலியுறுத்தி உள்ளார்.

இதுபற்றி தமன்னா கூறும்போது, ‘’இந்தியில் இப்போது, பிரபுதேவா ஜோடியாக காமோஷி என்ற படத்தில் நடித்துள்ளேன். சாக்ரி டோலட்டி இயக்கியுள்ளார். இதில் பூமிகாவும் நடித்திருக்கிறார். இந்தியில் ஏன் அதிகம் நடிக்கவில்லை என்று கேட்கின்றனர். எப்போதும் மொழியை பார்த்து நடிக்கவில்லை. ஸ்கிரிப்ட் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க சம்மதிக்கிறேன். அதோடு ஏதோ ஒரு படத்தில், என்றில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க நினைக்கிறேன்.


Advertisement

இப்போது பயோபிக் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீதேவியின் வாழ்க்கை கதை சினிமாவாக எடுக்கப்பட்டால், அதில் நடிக்க தயாராக இருக்கிறேன். சினிமாவில் ஸ்ரீதேவியாக நடிப்பது எனது ஆசை. சிறு வயதில் இருந்தே எனக்குப் பிடித்த நடிகை அவர்’’ என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement