ராணுவ கேன்டீன்களில் இனி சொகுசு கார்களை வாங்க முடியாது ! மத்திய அரசு கட்டுப்பாடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ராணுவ வீரர்கள் ஃபார்ச்சுனர், சஃபாரி போன்ற எஸ்யுவி வகை கார்களை மிலிட்டரி கேன்டீன்களில் இனி வாங்க முடியாது. 


Advertisement

ராணுவத்தின் சார்பில் மிலிட்டரி கேன்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கேன்டீனிலிருந்து ராணுவத்தில் வேலைப்பார்ப்பவர்களின் குடும்பங்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும். இதில் மளிகை பொருட்கள், பைக், கார் போன்ற பொருட்கள் கிடைக்கும். இதனால் ராணுவ குடும்பத்தினர் பயன்பெற்று வந்தனர். அத்துடன் இங்கு வாங்கும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி மற்றும் பிற வரி சலுகைகள் அளிக்கப்பட்டு வந்தது. 


Advertisement

இந்நிலையில் தற்போது மிலிட்டரி கேன்டீன்களிலிருந்து கார்கள் வாங்குவதற்கு மத்திய அரசு புதிய கட்டுபாட்டை விதித்துள்ளது. அதன்படி இனிமேல் மிலிட்டரி கேன்டீன்களில் இந்த மாதம் முதல் ரூ12லட்சம் மதிப்பிலான 2.,500 சிசி வரையிலான கார்களை மட்டுமே வாங்கமுடியும். இதனை ராணுவத்தில் சம்பள அளவுகோள் 10 முதல் 18 வரை இருக்கும் வீரர்கள் மட்டுமே வாங்க முடியும். அதேபோல ராணுவத்தில் சம்பள அளவுகோள் 3ஏ முதல் 9 வரை இருப்பவர்கள் ரூ 5லட்சம் மதிப்புடைய 1,400 சிசி வரையிலான கார்களை வாங்கமுடியும். 

மேலும் இந்தக் கார்களை வாங்குவதற்கான காலக்கெடுவையும் அரசு அறிவித்துள்ளது. இதில் ஒரு வீரர் ராணுவ பணியிலிருக்கும் போது ஒரு காரும், ஓய்வுப் பெற்ற பிறகு ஒரு காரும் வாங்க முடியும். அத்துடன் ஒரு கார் வாங்கி 8 ஆண்டுகள் கழித்து தான் மற்றொரு காரை வாங்க முடியும். இந்த புதிய விதிகளால் மிலிட்டரி கேன்டீன்களில் இனி ஃபார்ச்சுனர், இன்னோவா, காரோலா ஆல்டிஸ், ஸ்கார்பியோ போன்ற கார்களை வாங்கமுடியாது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement