லண்டன் மைதானத்தில் விஜய் மல்லையா: திருடன் என கூச்சலிட்ட ரசிகர்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை காண வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை நோக்கி, திருடன் என ரசிகர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்தது. ஷிகர் தவான் 117 ரன்னும் விராத் கோலி 82 ரன்னும் ரோகித் சர்மா 57 ரன்னும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் முடிவில் 316 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 36 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 


Advertisement

இந்தப் போட்டியை காண, பிரபல தொழிலதிபரும் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கட‌ன் ஏய்ப்பு வழக்கில் வெளிநாட்டுக்கு தப்பியவருமான விஜய் மல்லையா, ஓவல் மைதானத்துக்கு நேற்று வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பேசியபோது, தான் விளையாட்டுப் போட்டியைக் காண வந்ததாகத் தெரிவித்துவிட்டு மைதானத்துக்குள் சென்றார். 

போட்டி முடிந்து வெளியே வந்த அவரை, இந்திய ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். ‘திருடன் திருடன்’ எனக் கூச்சலிட்டனர். இதனால் அவர் கடுப்பானார். அவரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, ‘’என் தாய் காயமடையவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement