புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78


Advertisement

திமுகவை சேர்ந்த ஜானகிராமன் கடந்த 1996-ஆம் ஆண்டு முதல் 1999-ஆம் ஆண்டு வரை புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் இருந்து தொடர்ந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜானகிராமன், உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது.


Advertisement

ஜானகிராமன் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அவரது உடலுக்கு அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியும் ஜானகிராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஜானகிராமன் உடலுக்கு இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement