கிரண்பேடியின் 70வது பிறந்த நாள் : விமர்சையாக கொண்டாட்டம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் 70வது பிறந்த நாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. 


Advertisement

புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் கிரண்பேடி. இவர் 1949ஆம் ஆண்டு பஞ்சாப்பில் இருந்த இவர், ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அதன்பின்னர் பாஜகவில் இணைந்தார். தற்போது ஆளுநராக உள்ளார். இன்று இவரது 70வது பிறந்த தினம். இவரது பிறந்த நாள் புதுச்சேரி ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது.


Advertisement

ஆளுநர் மாளிகையில் உள்ள பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு‌ செய்த கிரண் பேடி, ஊழியர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்‌‌. கிரண்பேடியின் மீது மலர்களை அள்ளிவீசி ஆளுநர் ‌மாளிகை‌ ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பேடிய கிரண்பேடி, புதுச்சேரி மக்களுக்கு சேவை செய்வதே தனது எண்ணம் என்றும், மக்களின் வரிப்பணம் மக்களுக்கு முழுமையாக சென்றடை‌‌ய வேண்டும் என்றும் கூறினார். பிறந்தநாள்‌ விழா‌வில் தலைமை செயலர் அஷ்வின்குமார், டிஜிபி சுந்தரி நந்தா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.‌
 

loading...

Advertisement

Advertisement

Advertisement