தோனி வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் நொய்டா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான வீடு ஒன்று விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அந்த வீட்டில் சில கட்டுமான வேலைகள் நடந்தும் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டுக்குள் இருந்த எல்இடி உள்ளிட்ட சில பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. 


Advertisement

இது குறித்து நொய்டா போலீசாரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்த போலீசார் ராகுல், பப்லு, இக்லாக் ஆகிய  3 பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல் அதிகாரி, வீட்டில் வெளிச்சம் இல்லாததை வைத்து வீட்டில் யாருமில்லை என்பதை கொள்ளையர்கள் தெரிந்துகொள்கிறார்கள். 
மேலும் வீட்டு அழைப்பு மணியை பலமுறை அழுத்தி யாரும் இல்லை என்பதை உறுதி செய்கிறார்கள். பின்னரே அந்த வீட்டில் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடம் இருந்து இன்வெர்ட்டர்ஸ், 5 மடிக்கணினிகள், 5 எல்இடி டிவிக்கள், மற்ற வீட்டு உபயோகப்பொருட்கள் எனப் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தக் கொள்ளைக் கும்பலில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement