மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கத்திற்காக டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் சில முக்கிய விளையாட்டு தொடர்களின் தொடக்கத்திற்கு டூடுள் வெளியிடுவது வழக்கம். அதன்படி இன்று பிரான்சு தலைநகர் பாரிஸில் தொடங்கவுள்ள மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு சிறப்பு கூகுளை வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் பிரான்சு அணி மற்றும் தென் கோரியா அணிகள் மோதவுள்ளன.
இந்த உலகக் கோப்பை தொடரில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளது. இம்முறை முதல் முறையாக பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சிலி, ஸ்காட்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜமைக்கா அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் அமெரிக்கா தனது முதல் போட்டியை அடுத்த புதன்கிழமை விளையாடுகின்றது.
இந்த உலகக் கோப்பை போட்டியில் 6 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் 6 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளும் மற்றும் சிறப்பாக செயல்பட்ட மூன்றாவது இடம்பிடித்த அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை