ஊழல் அதிகாரிகளுக்கு சாதகமாகியதா சட்டத்திருத்தம்?

ஊழல் அதிகாரிகளுக்கு சாதகமாகியதா சட்டத்திருத்தம்?
ஊழல் அதிகாரிகளுக்கு சாதகமாகியதா சட்டத்திருத்தம்?

தமிழகத்தில் 2018-19-ஆம் ஆண்டில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகள் 77 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தமே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

2017-2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழலில் ஈடுபட்டதாக அரசு அதிகாரிகள் மீது நடத்திய விசாரணைகளின் எண்ணிக்கை 505. இதில் 189 சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஊரக மேம்பாடு, வருவாய் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மீது தான் அதிக எண்ணிக்கையில் ஊழல் புகார்கள் வந்திருந்தன.

2018-2019-ஆம் ஆண்டு 231 பேர் மீது மட்டுமே விசாரணை நடைபெற்று 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஓராண்டிலேயே அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார் குறைய ஊழல் தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தமே காரணமென சொல்லப்படுகிறது. ஊழல் புகாருக்குள்ளாகும் அரசு அதிகாரிகள் மீது விசாரணை தொடங்கவும், வழக்கு தொடரவும், சம்பந்தப்பட்ட துறையில் நியமன அதிகாரம் கொண்ட உயரதிகாரி எழுத்துப்பூர்வமாக அனுமதி அளிக்க வேண்டும் என்பதே அந்த திருத்தம்.

ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் உயரதிகாரி அனுமதி கொடுக்கவில்லையெனில் காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை. நேர்மையான அரசு அதிகாரிகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட திருத்தம், முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளையும் காப்பதாக சொல்லப்படுகிறது. உயரதிகாரியின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டி இருப்பதால் அரசு அதிகாரிகள் மீதான புகார்களின் விசாரணை மேலும் தாமதப்படுவதாக விசாரணை அமைப்புகளில் உள்ள காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com