“தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறந்திருக்கலாம்”- அரசாணை வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்க அனுமதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

தொழில் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதிக்கும் அரசாணை 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இதன்படி பணியாளர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும், நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய வேண்டும், ஓவர் டைமுடன் சேர்த்தால் கூட நாளொன்று பத்தரை மணி நேரம் மட்டுமே வேலைவாங்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. பெண் பணியாளர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியில் இருக்க கூடாது, இரவு 8 முதல் காலை 6 வரை பணியில் இருக்க பெண்கள் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்க வேண்டும், பெண் பணியாளர்களுக்கு முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும், பெண்கள் புகாரளிக்க ஏதுவாக கமிட்டி அமைத்து அது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement