தென்மேற்கு பருவமழை ஜுன் 8ஆம் தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 5 நாட்கள் தாமதமாகி 6ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே இந்திய வானிலை தெரிவித்திருந்தது. இதையடுத்து ஒரு நாள் தாமதமாக 7ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒருநாள் தாமதமாக ஜூன் 8ஆம் தேதி கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அத்துடன் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு அரபிக் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவமழையால் வடகிழக்கு மாநிலங்கள் 3 முதல் 4 நாட்கள் மழை பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு கேரளாவில் மழை பொழிவால் பெரு வெள்ளம் ஏற்பட்டதால், இந்த முறை மீட்புப் படை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அத்துடன் தென்மேற்கு பருவமழையை நம்பி எல்லையோர தமிழக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி