ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், “பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிகினா பானு என்ற பெண் உயிரிழந்துள்ளார். அத்துடன் மற்றொரு நபர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவரின் கணவர் ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் 101 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தத் தாக்குதல்கள் குறிப்பாக புல்வாமா, ஷோபியன், குல்கம் மற்றும் அனந்தனாக் பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?