“தியானென்மென் படுகொலையை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளுங்கள்” - அமெரிக்கா வலியுறுத்தல்

The-30th-anniversary-of-the-Tiananmen-Square-protests-in-China

சீனா வரலாற்றின் கறுப்புப்பக்கமான தியானன்மென் சதுக்க படுகொலையின் 30 ஆவது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 


Advertisement

சீனாவில் 1989 ஆம் ஆண்டு ஜனநாயக சீர்திருத்தம் கோரியும், ஊழலை ஒழிக்க வலியுறுத்தியும் மாணவர்கள் உள்ளிட்டோர் 7 வாரங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இறுதியில் அந்த ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி தியனென்மென் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது சொந்த நாட்டு மக்களின் போராட்டத்தை ஒடுக்க ராணுவ டாங்கிகளையும் படைகளையும் நிறுத்தியது சீனா. மக்கள் போராட்டத்தை ஒடுக்க நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

Image result for Tian Men Square


Advertisement

இதுகுறித்த தகவல்களை அடக்கி வாசித்த சீனா, ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாக மட்டுமே வெளி உலகத்திற்கு சொன்னது. ஆனால், பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த சம்பவத்தின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக போராளிகள் கைது செய்யப்பட்டு, சமூக ஊடகங்கள் இதுபற்றி வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரும் தியானென்மென் சதுக்கத்தில் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

Image result for Tian Men Square

இந்நிலையில், தியானென்மென் படுகொலையை பொதுவெளியில் சீனா பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, தியானென்மென் சதுக்க படுகொலைக்கும், அதன் பின் காணாமல் போனவர்கள் குறித்தும் சீனா பகிரங்கமாக ஒப்புக்கொள்வதுதான் மனித உரிமை மற்றும் அடிப்படை சுதந்திரத்திற்கும் அடையாளமாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement