வழிப்பறி கொள்ளையன் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

Police-gunfire-on-the-robbery

கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி அருகே தப்பியோட முயன்ற வழிப்பறி கொள்ளையன் மீது, காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement

தமிழக கர்நாடக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளி, ஓசூர் சாலையில் இளைஞர் ஒருவர் வழிப்பறியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதையறிந்து, அத்திப்பள்ளி காவல்நிலையத்தில் இருந்து உதவி ஆய்வாளர் பாலாஜியும், தலைமைக் காவலர் பிரகாஷும் கொள்ளையனை பிடிக்கச் சென்றனர். அப்போது, தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளையன், தலைமைக் காவலர் பிரகாஷை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 


Advertisement

தப்பியோட முயன்ற கொள்ளையனை எச்சரிக்கை செய்வதற்காக, துப்பாக்கியை எடுத்த பாலாஜி, வானத்தை நோக்கி இருமுறை சுட்டார். ஆனால், கொள்ளையன் சரணடையாததால், அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் கால் பகுதியில் குண்டு பாயந்த கொள்ளையனும், கத்திக்குத்தில் காயமடைந்த தலைமைக் காவலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழிப்பறியில் ஈடுபட்டது பெங்களூருவைச் சேர்ந்த சேசாங் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement