மாயமான போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

13 பேரும் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்த விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Advertisement

அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, நேற்று பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. விமானத்தில் 8 விமானிகளும், 5 பயணி கள் என 13 பேர் இருந்தனர். இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போன தால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.


Advertisement

உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. நேற்று முழுவதும் தேடியும் விமானம் எங்கு சென்றது என்பது தெரியாததால், இன்றும் விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என கருதப்படும் பகுதி குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், அங்கு ஹெலிகாப்டர்கள் விரைந்திருப்பதாகவும் விமானப் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் எம்ஐ-17 ஹெலிகாப்டர்களுடன் சி-130ஜே மற்றும் ஏஎன்-32 ரக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. வான்வழியாக மட்டுமின்றி தரைவழி தேடுதல் முயற்சியிலும் ஈடுபட்டிருப்பதாகவும், விமானப் படை உயரதிகாரிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement

ரஷிய தயாரிப்பான இந்த ஏ.என்.32 ரக விமானம், விமானப்படை வீரர்களை கொண்டு செல்லும் பணிகளுக்கு பயன்படுத்தப் பட்டு வந்தது.  2009ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் இதே ரக விமானம் ரின்ச்சி சிகரத்தில் மோதி விழுந்து நொறுங்கி யதில் 13 வீரர்கள் உயிரிழந்தனர். 2016ஆம் ஆண்டில் இதேரக விமானம் சென்னையில் இருந்து அந்தமானுக்கு 29 பேருடன் புறப்பட்ட நிலையில் காணாமல் போனது. சுமார் 2 லட்சம் கடல் சதுர மைல்கள் வரை தேடியும் இதுவரை அந்த விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் மூன்றாவது விபத்தாக, இப்போது ஏஎன்-32 விமானம் 13 பேருடன் காணாமல் போயுள்ளது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement