உ.பி.யில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

மக்களவைத் தேர்தலின்போது பாஜகவை வீழ்த்த, உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதமாகவே வந்தது. மொத்தம் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 62 இடங்களில் வெற்றி கண்டது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்களும், சமாஜ்வாதி கட்சிக்கு வெறும் 5 இடங்களுமே கிடைத்தது.


Advertisement

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு பின் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் நடக்க உள்ள 11 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனியாக தேர்தலை சந்திக்க தயாராகுமாறு பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களை அக்கட்சித் தலைவர் மாயாவதி கேட்டுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணியால் எந்தவொரு பலனும் இல்லை என அவர் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

யாதவ் மக்களின் ஓட்டு தங்கள் கட்சிக்கு வந்துசேரவில்லை என கருதும் மாயாவதி, அதேசமயம் தங்களின் ஓட்டுகள் அனைத்தும் கூட்டணி கட்சிக்கு சென்று சேர்ந்திருப்பதாக கருதுகிறார். இதனாலேயே கூட்டணியால் தன் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என அவர் கருதுவதாகவும் கூறப்படுகிறது. இடைத்தேர்தலை தனியாக சந்திப்பது குறித்த அறிவிப்பை மாயாவதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் எனவும் தெரிகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement