விருதுநகரில் இடியுடன் கூடிய மழை : மக்கள் மகிழ்ச்சி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Advertisement

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில் கொளுத்தியது. கடுமையான வெயிலினால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். இந்நிலையில் இன்று மாலை திடீரென அருப்புக்கோட்டை காந்திநகர் பாலையம்பட்டி மற்றும் கல்குறிச்சி காரியாபட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. 

சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அத்துடன் ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கி நின்றது. வெயில் தனிந்து குளிர்ச்சியான வானிலை நிலவியது. இந்த தீடீர் மழையினால் அருப்புகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெப்பக்காற்று நீங்கி, குளிர்ச்சிய காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement