குஜராத் நரோடா தொகுதி பாஜக எம்.எல்.ஏ பால்ராம் தவானி மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலையில் ஒரு இளம் பெண்ணை அடித்து உதைத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
குபேர் நகர் வார்டு பகுதியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான அந்தப் பெண்ணின் பெயர் நிது தேஜ்வானி. நேற்று அவருடைய வார்டு பகுதியின் குறைகளை அந்தத் தொகுதி எம்.எல்.ஏவிடம் தெரிவிக்க அவருடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் அவர் மீது இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்துமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், பாஜக எம்.எல்.ஏ மீதுபோலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் குறித்து அந்தப் பெண் கூறியபோது, “நேற்று எங்கள் பகுதியிலுள்ள குறைகளை சொல்வதற்காக எம்.எல்.ஏ-வை சந்திக்க சென்றேன். நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை கேட்காமலேயே என் கன்னத்தில் அவர் அறைந்தார். என்னை மட்டுமல்லாமல் என் கணவரையும்அவரது ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்கினர். நான் மோடிஜியிடம் கேட்பது என்னவென்றால், எப்படி பாஜக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்புடன் இருப்பது? என்பதைதான்” எனத் தெரிவித்துள்ளார்.
இதைப் பற்றி எம்.எல்.ஏ-விடம் கேட்டபோது, “நான் செய்த தவறை உணர்கிறேன். நான் வேண்டும் என்றே அதை செய்யவில்லை. உணர்ச்சி வசப்பட்டு இந்தத் தவறை செய்துவிட்டேன். கடந்த 22வருடங்களாக அரசியலில் இருந்து வருகிறேன். இது போன்றதொரு சம்பவம் இதுவரை நிகழ்ந்ததில்லை. அந்தப் பெண்ணிடம் இதற்காக
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்