மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத் பொறுப்பேற்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்திய அமைச்சர்களாக ஸ்மிருதி இரானி, ரவிசங்கர் பிரசாத், டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டனர். 


Advertisement

நரேந்திர மோடி, இரண்டாவது முறையாக கடந்த 30 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டன. இதையடுத்து அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பொறுப்பேற்று வருகின்றனர்.


Advertisement

காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு, ராகுல் காந்தியை தோற்கடித்த, ஸ்மிருதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டது. அதன் அமைச்சராக ஸ்மிருதி இரானி இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவிசங்கர் பிரசாத், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்ச ராக வி.கே.சிங், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக டாக்டர் ஹர்ஷவர்தன் ஆகியோரும் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு அந்தந்தத் துறைகளின் அதிகாரிகள் வாழ்த்துத் தெரிவித்தனர். 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement