[X] Close >

தேசிய காவலர் நினைவிடத்தில் அமித் ஷா மரியாதை!

Amit-Shah-Pays-Tribute-At-National-Police-Memorial-In-Delhi

தேசிய காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மரியாதை செலுத்தினார். காவலர் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார்.


Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டாணி 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 302 இடங்களில் கைப்பற்றியது. இதையடுத்து 2 வது முறையாக மோடி கடந்த 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 


Advertisement

இதில், பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். பின்னர் அமைச்சக உயரதிகாரிகளை‌ சந்தி‌த்து ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சகம் முன் உள்ள பல்வேறு முக்கிய பிர‌ச்னைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை உயரதிகாரிகளிடம் அவர் கேட்டறி‌ந்தார். குறிப்பாக காஷ்மீர் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அம்மாநில ஆளுநர் சத்ய‌பால் மாலிக்கிடம் கேட்டறிந்தார். 

இந்நிலையில் டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் அமித் ஷா மலர்வளையம் வைத்து இன்று மரியாதை செய்தார். காவலர் அருங்காட்சியகத்தையும் அவர் பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close