காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் இருந்து வெளியேறினார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் திவ்யா ஸ்பந்தனா ட்விட்டரில் ஆக்டிவாக இயங்கி வருபவர். அவ்வப்போது பாஜக குறித்து கருத்துகளை பதிவிட்டு பரபரப்பை உண்டாக்கக் கூடியவர். சமீபத்தில் பிரதமர் மோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.
சமீபத்தில் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பாஜகவின் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இந்த வாழ்த்துச்செய்தி காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலைப்பை ஏற்படுத்தியதாகவும் அதனாலே திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் ஏன் ட்விட்டர் பக்கம் நீக்கப்பட்டது என்பது குறித்து திவ்யா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான செய்தி தொடர்பாளர்கள், டிவி.சேனல்களில் பங்கேற்க, ஒரு மாதத்துக்கு அக்கட்சி தடை விதித்தது. இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
'தமிழகத்தில் திமுக ஆட்சி; மே.வங்கத்தில் மீண்டும் மம்தா!'- ஏபிபி-சிவோட்டர் கருத்துக்கணிப்பு
“மருத்துவர் சாந்தா உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்”- முதல்வர் பழனிசாமி
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"4 படம் ஓடிவிட்டால் நான்தான் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகிறார்கள்" - செல்லூர் ராஜூ
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?