''யார் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது'' - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்


Advertisement

புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்‌பட்டுள்ளது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது


Advertisement

மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் மொழி திணிப்பை ஏற்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர். 

மூன்று மொழிக் கொள்கை என்பது ஒரு குறிப்பிட்ட மொழியை மக்கள் மீது திணிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மூன்று மொழிக் கொள்கைக்கு எதிராக ஹேஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டு இந்திய அளவிலும் உலக அளவிலும் ட்ரெண்ட்டாகி வருகின்றன. 


Advertisement


இந்நிலையில் யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், ''இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது வெளியாகியுள்ளது வரைவு அறிக்கை மட்டுமே; மக்களின் கருத்துகளை கேட்டபிறகே முடிவு எடுக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement