ஜூன் 3 அன்று பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டம் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வரும் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதில் எந்த மாற்றமும் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 


Advertisement

தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை கடந்த மே21 அன்று அறிவித்தது.

 இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், பாடநூல்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைந்துவிட்டதா என்பது குறித்து 31ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. 


Advertisement

இந்நிலையில் ஜூன் 3 அன்று பள்ளி திறக்கப்படாது என்றும் வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் 10 ஆம் தேதி அன்றே திறக்கப்படும் என்றும் அதிகாரமற்ற ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், வீண் புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 3ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம், தொடக்கக் கல்வி இயக்ககங்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன. பாடத்திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதால், திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement