JUST IN

Advertisement

மோடி ஆட்சியில் வரலாறு காணாத வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Advertisement

2017-18-ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்‌கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிப்பதாக ஜனவரியில் செய்திகள் வெளியாகி இருந்தன. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையிலெடுத்து ஆளும் பாஜக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தன. ஆனால், அப்படியொரு தகவலை வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது. 

           


Advertisement

இந்நிலையில், ஜனவரி மாதத்தில் வெளியாகி இருந்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது. மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் சார்பில் தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் பல்வேறு ஆய்வுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வேலைவாய்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட மாதிரி ஆய்வு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை 2017-18 ஆம் ஆண்டில் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நகர்புறங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது. 

நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீண்டும் நேற்று பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று வேலைவாய்ப்பின்மை குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement