[X] Close >

காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மரியாதை

Prime-Minister-Narendra-Modi-pays-tribute-to-Mahatma-Gandhi

பிரதமராக இன்று பதவியேற்க உள்ள நிலையில் மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை செலுத்தினார்.


Advertisement

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அந்த கட்சி மட்டும் 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து புதிய பிரதமராக பதவி ஏற்குமாறு மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.  மோடி இன்று இரண்டாவது முறையாக, பிரதமராக பதவி ஏற்கிறார். இன்று மாலை 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

இந்நிலையில், டெல்லியில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்துக்கு இன்று காலை சென்ற பிரதமர் மோடி, மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். மோடியுடன் பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட் டோரும் மரியாதை செலுத்தினர். 

பின்னர் போர் நினைவு சின்னத்துக்கு சென்ற அவர், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதில், ராணுவ தளபதி பிபின் ராவத், கடற்படைத் தளபதி சுனில் லன்பா, விமானப்படை துணைத் தலைவர் ஆர்.கே.எஸ் பண்டாரியா ஆகியோரும் கலந்து கொண்டு அவருடன் மரியாதை செலுத்தினர். 


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close