[X] Close

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்: அழுத்திச் சொல்லும் ஓபிஎஸ்

Subscribe
o-pannerselvam-insists-the-suspicion-again

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தெரிவித்துள்ளார்.


Advertisement

தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன்? என திமுக செயல்தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அரசியல் காரணங்களுக்காகவே ஸ்டாலின் தனக்கே உரிய பாணியில் விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அது அவருக்கு வாடிக்கையாகி விட்டது.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தபோது மருத்துவமனையில் அவரை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. மருத்துவக்குழுவினர் வெளியே வந்து சொல்கிற தகவல்களை மட்டுமே வைத்து நம்பிக்கொண்டிருந்தோம். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவரிடம் ஆலோசித்திருக்கிறேன். ஆனால், நேரில் பார்க்க முடியவில்லை’ என அவர் தெரிவித்தார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Related Tags : o panneerselvamo panneerselvam
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close