கோடரியால் மனைவியை வெட்டிக் கொன்ற 60 வயது கணவர் 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேறு ஒரு பெண்ணுடன் நடனம் ஆடியது குறித்து கேள்வி கேட்ட மனைவியை கணவர் வெட்டிக்கொன்றுள்ள சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.


Advertisement

ராஜஸ்தான் உதய்பூரைச் சேர்ந்த கஷுராம் (60), அவரது மனைவி பிஹாலி (50). இவர்கள் இருவரு பக்கத்துவீட்டாரின் திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது திருமணத்தின் ஒரு நிகழ்வாக நடந்த நடன விழாவில் கஷுராம், வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இதனைப்பார்த்த் பிஹாலி கோபமடைந்துள்ளார்.


Advertisement

திருமணவிழா முடிந்து வீட்டுக்கு வந்ததும், கஷுராமுக்கும், பிஹாலிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் கோபமடைந்த கஷுராம், அருகில் இருந்த கோடரியால் பிஹாலியை தாக்கியுள்ளார். இதில் பிஹாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிஹாலியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிஹாலியின் வளர்ப்பு மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கஷுராம் கைது செய்யப்பட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement