வாரணாசி செல்கிறார் பிரதமர் மோடி: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரதமர் மோடி வருவதை ஒட்டி, வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


Advertisement

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் வாராணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 4.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தன்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார். அதற்கு முன், அங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார். அங்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட இருக்கின்றன.

வாராணசியின் முக்கிய பகுதிகளில் சுமார் 5 கி.மீ வரை அவர் ஊர்வலமாகச் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பின், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பேசுகிறார். அவரை வரவேற்க அங்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Advertisement

காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் அவர் வழிபடுவதை வெளியில் இருந்து பார்க்க, பிரமாண்ட டிவி வைக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த பாது காப்பு ஏற்பாடுகளும்  செய்யப்பட்டுள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement