ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், மைக்கேல் கிளார்க், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விராத் கோலி என்று பாபர் ஆஸமை புகழ்ந்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள கிரிக்கெட் அணிகள், அங்கு பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் கடந்த 24 ஆம் தேதி பிரிஸ்டலில் நடந்தது.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 47.5 ஓவர்களில் 262 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கிய பாபர் ஆஸம் அபாரமாக ஆடி, சதம் அடித்தார். அவர் 108 பந்துகளில் 112 ரன் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இந்தப் போட்டியில் ஆப்கான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விராத் கோலி என்று பாபர் ஆஸமை புகழ்ந்தார். அந்த போட்டியை வர்ணனை செய்த அவர், ‘’பாபர் ஆஸம் சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் பாகிஸ்தானின் விராத் கோலி. அந்த அணி, அரையிறுதி அல்லது இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் இளம் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பாபர் ஆஸம் ஏற்கனவே சில சாதனைகளை படைத்துள்ளார். டி20 போட்டியில் வேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர் இவர்தான். அதே போல, 21 ஒரு நாள் போட்டிகளிலேயே, ஆயிரம் ரன்னை கடந்தும் சாதனை படைத்துள்ளார்.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி