[X] Close >

ஆண்டுக்கு 12,000 விவசாயிகள் தற்கொலை: மத்திய அரசு தகவல்

centre-says-12000-farmer-suicides-this-year

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு 12 ஆயிரம் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகமத்திய அரசு தெரிவித்துள்ளது.


Advertisement

விவசாயிகள் நலனுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவிடுவதாக அரசு கூறினாலும், அதன் பலன் உரியவர்களை சென்றடைந்ததாக தெரியவில்லைஎனக் கூறி தொண்டு அமைப்பு ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, கடந்த 2015ம் ஆண்டில் அதிகபட்சமாகமகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 291 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழகத்தை பொறுத்தவரை 606 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். விவசாயிகள் நலன் காக்க பல முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.


Advertisement

இன்னும் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close