வாரிசுகளை முன்னிறுத்தியதே காங். தோல்விக்கு காரணமா ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வாரிசுகளை முன்னிறுத்த அழுத்தம் கொடுத்ததே காங்கிரசின் பின்னடைவுக்கு காரணம் என கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக கூறப்படுகிறது.


Advertisement

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிடைக்க குறைந்தபட்சம் 55 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை.


Advertisement

இதனிடையே தேர்தல் தோல்வி குறித்து ஆராய டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, தேர்தல் தோவிக்கு முழுப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல்காந்தி முடிவு செய்தார். ஆனால் ராகுல்காந்தியின் ராஜினாமா முடிவை மற்றவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். அத்துடன் தொடர்ந்து ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக வழிநடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

அப்போது காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களை கடுமையாக விமர்சித்து ராகுல்காந்தி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாநில முதல்வர்கள் தங்கள் வாரிசுகளுக்கே முக்கியத்துவம் அளித்ததாகவும், சில மூத்த தலைவர்களும் தங்கள் வாரிசுக்காக கட்சிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தெரிகிறது.


Advertisement

காங்கிரஸ் படுதோல்வி சந்தித்துள்ள ராஜஸ்தானின் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் ஆகியோரையும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் ராகுல் காந்தி பெயர் குறிப்பிடாமல் விமர்சித்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காங்கிரசில் சில தலைவர்கள் கட்சியின் நலனைவிட தங்கள் சொந்த நலன் மற்றும் வாரிசுகளின் முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்துவது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக வாரிசு அரசியல் பற்றி பேசுவதற்கு முன், காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறிய ராகுல், மற்ற தலைவர்கள் அதை ஏற்க மறுத்தபோது, ஏன் எங்கள் குடும்பம்தான் தலைமை ஏற்க வேண்டுமா, யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என்று கூறியதாகவும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement