மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் ஒப்பிடப்பட்ட விவிபாட் இயந்திரங்கள் அனைத்திலும் வாக்கு எண்ணிக்கை துல்லியமாக பொருந்தியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2019 மக்களவைத் தேர்தலில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் பதிவாகியுள்ள விவிபாட் வாக்குகளை எண்ண வேண்டுமென்று சில கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால் அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என்று தெரிவித்தது.
அதன்படி, 4000க்கும் மேற்பட்ட பேரவை தொகுதிகளில் தலா 5 விவிபாட் வீதம், 20ஆயிரத்துக்கும் அதிகமான விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டு மின்னணு இயந்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவை முற்றிலும் துல்லியமாகப் பொருந்தியதாகவும், வாக்கு இயந்திர வாக்குகளுக்கும், விவிபாட் வாக்குகளுக்கும் வேறுபாடுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டும் விவிபாட் பயன்படுத்தப்பட்டன. 2017ம் ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது. இப்போது நடைபெற்ற 2019 மக்களைவைத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை