காஷ்மீரில் வரலாறு காணாத வாக்கு வங்கியை அதிகரித்த பாஜக

At-46-Per-Cent-BJP-Gets-Highest-Ever-Vote-Share-In-Jammu-and-Kashmir

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.


Advertisement

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு, பாரமுல்லா, ஸ்ரீநகர், உதம்பூர், அனந்த்நாத் மற்றும் லடாக் ஆகிய 6 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 3 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி இணைந்து மூன்று தொகுதிகளில் வென்றுள்ளன. 

இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜக மட்டும் தனித்து நின்று 46.4 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. இது காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய மூன்றை காட்டிலும் அதிக வாக்குகளாகும். மொத்தம் பதிவான 34,79,155 வாக்குகளில் பாஜக 16,48,041 வாக்குகளை பெற்றது. ஜம்மு, உதம்பூர் மற்றும் லடாக் ஆகிய தொகுதிகளை வென்றது.


Advertisement

               

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 34.40 வாக்கு சதவீதம் பெற்றிருந்தது. அந்தத் தேர்தலிலும் ஜம்மு, உதம்பூர் மற்றும் லடாக் தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. ஆனால், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 23 சதவீதம் வாக்குகளை பெற்றிருந்தது. 2009 மக்களவைத் தேர்தலில் பாஜக 18.61 சதவீதம் வாக்கு பெற்றிருந்தது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement