பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்க பிரதமர் மோடியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை சந்திக்க உள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி கண்டது. இதேபோல மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக வரும் 30-ஆம் தேதி பதவியேற்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல தலைவர்களை அழைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். அதன்படி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை இன்று மாலை சந்திக்கும் ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறார். அதனைத்தொடர்ந்து பிரதமர் மோடியை நாளைஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது, தன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடியை ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.
Loading More post
இந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்!
தினசரி கொரோனா பாதிப்பு 7,000-ஐ நெருங்கியது: தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
அதிதீவிரமாக பரவும் கொரோனா... நெருங்கும் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் - முடிவுதான் என்ன?
மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!
கொரோனாவும் ஐந்து மாநில தேர்தலும்: அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!