ரூபாய் மதிப்பு நீக்க ‌நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி குறையும்...! உலக வங்கி தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது கணிப்பை உலக வங்கி குறைத்து அறிவித்துள்ளது.


Advertisement

நடப்பு நிதியாண்டில் இந்தியா 7.6 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்திருந்தது. ஆனால், ரூபாய் மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு தனது புதிய கணிப்பை அது தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் வளர்ச்சி 7 சதவிகிதமாக குறையும் என உலக வங்கி கணித்திருக்கிறது.

எதிர்பாராத வகையில் அதிக மதிப்புடைய கரன்சி நோட்டுகள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டதால், மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி தடைபட்டிருப்பதாக அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்தடுத்த நிதியாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வலுப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


Advertisement

மேலும், உலக பொருளாதாரம் 2.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி தலைவர் ஜிங் யாங் கிம் கூறியுள்ளார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக சரக்கு மற்றும் சேவை வரி, தொழிலாளர் மற்றும் நிலச் சீர்திருத்தங்களில் மாற்றம் ஏற்படலாம் எனவும் உலக வங்கி தெரிவித்திருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement