குஜராத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் சூரத் நகரின் சர்தானா பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் பயிற்சி பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியிலிருந்த 1 ஆசிரியர் உள்பட 15 பேர் தீயில் கருகி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ பற்றிக் கொண்டதை அறிந்த மாணவர்கள் வணிக வளாகத்தில் இரண்டாவது மாடியிலிருந்து தரை நோக்கி குதிக்கும் காணொலி ஒன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில், தீவிபத்தில் இறந்த நபர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமென, அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மேலும் தீவிபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கோர தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு, குஜராத் மாநிலத்திற்கு உரிய உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தீவிபத்தில் வணிக வளாகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Loading More post
'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம் பதிவிட்ட ராகுல் காந்தி!
''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
தாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு!
45வது நாளாக மாணவர்கள் போராட்டம்: தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்
'ராகுலின் தமிழ் வணக்கம்': தமிழகத்தில் தேர்தல் பரப்புரையை இன்று தொடங்குகிறார் ராகுல்காந்தி!
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’