இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 338 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 2வது பயிற்சி போட்டி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே வேல்ஸில் உள்ள சோபியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 21 (15) எடுத்து அவுட் ஆகினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹாசிம் அம்லா மற்றும் டு பிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு தென்னாப்பிரிக்க அணி 338 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிக பட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 88 (69) ரன்கள் குவித்தார். அம்லா 65 (61), டஸன் 40 (41) மற்றும் அண்டிலி 35 (34) ரன்கள் சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த டிவைன் மற்றும் மோரிஸ் தலா 13 பந்துகளில் 25 மற்றும் 26 ரன்களை எடுத்தனர். இலங்கை அணியில் லக்மால் மற்றும் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தற்போது 339 என்ற கடினமான இலக்கை எதிர்த்து இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்கத்திலேயே அந்த அணியில் குசல் பெராரா மற்றும் திரிமன்னே ஆகிய இரண்டு பேரும் 0 (2) மற்றும் 10 (11) என்ற ரன்களில் வெளியேறி சொதப்பினர். 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த 58 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு
ரஃபேல் விவகாரத்தில் 'இடைத்தரகர்' - பிரெஞ்சு ஊடகத் தகவலை சுட்டிக்காட்டி காங்கிரஸ் சாடல்
அடுத்தடுத்து அதிரடிகள்... இப்போது தமிழக அரசின் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுவது எப்படி?
அரக்கோணம் இரட்டைக் கொலை: 4 நாள்களுக்குப் பிறகு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைப்பு
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு