அதிமுகவின் வரலாறு காணாத தோல்விக்கு யார் காரணம் என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகள் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற கட்சிகள் திமுகவின் “உதய சூரியன்” சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 23 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றி மூலம் திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
அதிமுகவின் கோட்டை எனக் கருத்தப்பட்ட கொங்குமண்டலத்தை திமுக இந்தத் தேர்தலில் தகர்த்துள்ளது. மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் ஆகிய இடங்களை திமுக கூட்டணி கட்சிகள் தன்வசப்படுத்தியுள்ளன.
அதிமுகவுக்கு ஒரே ஆறுதலாக தேனி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் வெற்றி பெற்றார். தேனியில் அமமுக பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிமுகவின் ஓட்டுகளை அமமுக நிச்சயம் பிரிக்கும் என்பதால் இது திமுக கூட்டணியான காங்கிரசுக்கு பலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால் தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவுக்கு பெரிய போட்டியாக இருக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டியுள்ளது. தேனி தொகுதியில் அதிமுக பெற்ற வெற்றிக்குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்குப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் பெரியசாமி, தேனியில் அதிமுகவின் வெற்றி மர்மமாகவே இருக்கிறது. அதிகாரிகளின் உதவியால் இந்த வெற்றியை அதிமுக அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் முதலமைச்சர், அமைச்சர்கள் சிலர் எனப் பலருக்கும் சொந்த ஊரான தென் மாவட்டங்களில் அதிமுக ஜொலிக்க முடியாமல் போனதை அரசியல் வட்டாரங்கள் கவனிக்கத்தவறவில்லை. பாஜகவுடனான கூட்டணியே இந்தத் தோல்விக்கு காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்தாலும், திமுகவுடன் கூட்டணி வைத்த கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
தென் மாவட்டங்களில் அதிமுகவின் வீழ்ச்சி குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் திருமலை, எம்ஜிஆர், ஜெயலலிதா இல்லாத அதிமுகவை ஏற்க தென் மாவட்டங்கள் மறுப்பதையே இந்தத் தேர்தல் முடிவு காட்டுவதாக தெரிவித்தார்.
திமுகவின் வெற்றி குறித்து பேசிய பேராசிரியர் ஒருவர், பாஜகவுக்கு எதிரான மனநிலையே திமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, புயலில் பாதிக்கப்பட்டவர்களை மத்திய அரசு அணுகிய விதம் ஆகியவை பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுகவுக்கு எதிராக அமைந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் கூட நாகர்கோவில், ராமநாதபுரம்,தூத்துக்குடி, தென்காசி ஆகிய இடங்களில் அதிமுக கடுமையான நெருக்கடியை திமுகவுக்கு கொடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?