அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

BJP-s-C-R-Patil-wins-by-6-89-lakh-votes--biggest-victory-margin

மக்களவைத் தேர்‌தலில் அதிக வாக்குக‌ள் வித்தியாசத்தில்‌ வென்ற‌ வேட்பாளர் என்ற பெயரை பாரதிய ஜனதா கட்சியின் சிஆர் பாட்டீல் பெற்றுள்ளார்‌. 


Advertisement

குஜராத் மாநிலம் நவ்சாரி தொகுதியில் போட்டியிட்ட இவர் 6 லட்சத்து 89 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் வேட்‌பாளரை தோற்கடித்தார். கடந்த 2014ம் ‌ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பீட் ‌தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் பிரீதம் முண்டே, 6‌ லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்‌தியாச‌த்தில் வெற்றி பெற்றதே இதுவரை இந்திய தேர்தல்‌களில் மிக‌ப்பெரிய வெற்றியாக ‌உள்ளது. 

(பிரதமர் மோடியுடன் சி.ஆர்.பாட்டீல்)


Advertisement

இந்நிலையில் தற்போது குஜராத் பாரதிய ஜனதா வேட்பாளர் சி.ஆர்.பாட்டீலின் வெற்றி 2வது மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. மக்கள வைத் தேர்தலி‌ல் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளர் என்ற பெயரை, பாரதிய ஜனதாவின் போலோநாத் பெற்றுள்ளார். 

இவர் உத்தரப்பிரதேச மாநிலம் மச்‌சிலிஷகர் தொகுதியில் 181 வாக்குகளில் தன்னை எதிர்த்து நின்று பகுஜன் ‌சமாஜ் கட்சி வேட்பாளரை வென்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement