மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 350 தொகுதிகள் வரை அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. அதில் 67.11 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஆட்சியமைக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதுவரை 503 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பாஜக 290 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 13 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் அமோக வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி தனிபெருபான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும் 2 இடங்களில் அக்கட்சி முன்னிலையில் உள்ளது. கூட்டணிகளை பொறுத்தவரை பாரதிய ஜனதா அணி 350 தொகுதிகளிலும் காங்கிரஸ் அணி 90 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன. வாக்கு இயந்திர பதிவுகளையும் ஒப்புகை சீட்டு இயந்திர பதிவுகளையும் ஒப்பிட்டு பார்க்கும் புதிய நடைமுறையால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாகிறது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்