பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள், 'ஏன் வாக்களிக்காமல் விட்டுவிட்டோம்? என்பதை எதிர்காலத்தில் உணர்வார்கள் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி முகத்தில் உள்ளது. சில திமுக வேட்பாளகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டும் உள்ளனர். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாஜக 5 தொகுதிகளிலும் படுதோல்வியை தழுவியது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பேட்டியளித்தார். அதில் பிரச்சாரத்தின் போது நான் இந்த நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் தொடர வேண்டுமென்று சொன்னேன். அதை உணர்ந்து பல மாநில மக்கள் மோடிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
அதேபோல் வாக்களிக்காத மக்கள், ஏன் வாக்களிக்காமல் விட்டுவிட்டோம் என்பதை எதிர்காலத்தில் உணர்வார்கள் என நினைக்கிறேன். மேலும் மகிழ்ச்சி என்னவென்றால், இந்த நாடாளுமன்றம் தொங்கு நாடாளுமன்றமாக இல்லாமல், தங்கும் நாடாளுமன்றமாக அமைந்ததுதான். தமிழகத்தில் நினைத்த அளவுக்கு வாக்குப்பெற முடியவில்லை.
நல்ல திட்டங்களை தவறாக முன்னிறுத்தி நடத்தப்பட்ட எதிர் பிரச்சாரங்களுக்கு தமிழக மக்கள் செவி சாய்த்திருக்கிறார்கள். ஆனாலும் எங்களுக்கு கோபம் இல்லை. நாங்கள் ஊழல் செய்யவில்லை. நல்லதே செய்கிறோம். ஆனாலும் ஏன் தமிழக மக்களிடம் வாக்குகளை பெறமுடியவில்லை என்பதை ஆத்ம பரிசோதனை செய்யும் நிலையில் இருக்கிறோம்.
தண்ணீர் பிரச்னையை தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டு மக்கள் தீர்ப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தூத்துக்குடி தொகுதியில் இருந்து எனது மக்கள் பணியை பிரிக்கமுடியாது. வருங்காலத்திலாவது மக்கள் பாஜகவை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!