மக்கள் கொடுத்த தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடையும் தருவாயில் உள்ளது. 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. பாஜக தனிப்பட்ட முறையிலே பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 90 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. தமிழகம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியே ஸ்மிருதி ரானியிடம் தோல்வி பெறும் நிலையில் உள்ளார்.
இந்நிலையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், “மக்கள் மோடியை பிரதமராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அமேதி தொகுதியில் என்னை வீழ்த்திய பாஜகவின் ஸ்மிருதி ரானிக்கு வாழ்த்துகள். எது தவறாக போனது என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. மக்களவைத் தேர்தலில் தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்; தொடர்ந்து போராடுவோம்” என்று கூறியுள்ளார்.
அதேபோல், தோல்விக்கு பொறுப்பேற்று கங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, காரிய கமிட்டிதான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பு சில நிமிடங்களே நடைபெற்றது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!