நீலகிரி தொகுதியில் ஆ.ராசா அமோக வெற்றி 

DMK-candidate-RAJA-wins-from-nilgiris

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றார்.  


Advertisement

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. முடிவில் கிட்டத்தட்ட வெளியாகிவிட்ட நிலையில் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 37 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. வெறும் 2 இடங்களில் மட்டுமே அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 


Advertisement

இந்நிலையில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட  திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 சுற்றுகளின் முடிவில் 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். மொத்தமாக ஆ.ராசா 5,46,493 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 3,41,136 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக, திமுக நேரடி போட்டியில் நீலகிரி முக்கிய தொகுதியாக பார்க்கப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற ஆ. ராசா, 2014ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் கோபால கிருஷ்ணனிடம் தோல்வியை சந்தித்தார். இந்த முறை அதிமுக கோபாலகிருஷ்ணனுக்கு பதிலாக தியாகராஜன் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement