துரைமுருகன் மற்றும் நடிகை குஷ்பு ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி தொடங்கி கடந்த 19 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வேலூர் தொகுதியில் முறைகேடு புகார் காரணமாக தேர்தல் ஆணையத்தால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பெரும்பான்மையான இடங்களை மத்தியில் பாஜகவும் மாநிலத்தில் திமுகவும் கைப்பற்ற உள்ளன.
இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துரைமுருகன், மீண்டும் இம்முறை சீறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளரும் நடிகையுமான குஷ்புவும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை தொலைக்காட்சிகளில் என்னை நீங்கள் பார்க்க இயலாது. ஏனென்றால் நான் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளேன். இதனால் நாளை நடக்கும் கூத்துக்களை என்னால் பார்க்க முடியாது. சில விஷயங்களை நான் திட்டமிட்டிருந்தேன், ஆனால் இயற்கை அதை நிராகரித்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
Loading More post
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?