தருமபுரி தொகுதியில் அன்புமணிக்கு தொடர் பின்னடைவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தருமபுரி தொகுதியில் அன்புமணிக்கு தொடர் பின்னடைவுருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி பின்னடைவை சந்தித்துள்ளார்.


Advertisement

மக்களவைத் தேர்தலுக்காக வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 350 தொகுதிகளில் முன்னிலை பெற்று, மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 37 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் மற்றும் பாமக வேட்பாளர் அன்புமணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி முன்னிலை பெற்று வந்தார். சில நேரங்களில் பின்னடைவை சந்தித்தார். 


Advertisement

தற்போதையை நிலவரப்படி அன்புமணி 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக வேட்பாளர் செந்தில்குமார் 2 லட்சத்து 63 ஆயிரத்து 56 வாக்குகளும், அன்புமணி 2 லட்சத்து 34 ஆயிரத்து 907 வாக்குகள் பெற்றுள்ளனர். அமமுக 14,167, நாம் தமிழர் 6,220 வாக்குகள் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 4,389 வாக்குகள் கிடைத்துள்ளன. 

loading...

Advertisement

Advertisement

Advertisement